மீண்டுமொரு ஈஸ்டர் தாக்குதலா..! பகீரை கிளப்பிய காத்தான்குடி சம்பவம்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் இன்று காத்தான்குடியில் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த தாக்குதல் மற்றுமொரு பயங்கர தாக்குதலுக்கு அடுத்த புள்ளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அச்சமும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காத்தான் குடியில் சஹ்ரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கம் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் 30 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தற்போது கைது செய்யப்பட்ட தரப்பினரை தீவிரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை, ஒன்றுகூடல் மைதானத்திலும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் அதிரடிப்படையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணியில் அரசியல் தலையீடுகளா...
காத்தான்குடி கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என பலர் வாதிட்டு வந்தாலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியும், தற்கொலைதாரியுமான சஹரானின் அடிப்படைவாதம் மீண்டும் புத்துயிர் பெறுகிறதா எண்ணப்பாட்டிற்குள் பலரை தள்ளியுள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடும் என்ற காட்டமான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஈஸ்டர் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் மீண்டுமொரு அவலக்குரலுக்கு வித்திடுகிறதா என்ற கேள்வியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |