தேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..
பௌத்த மதத்தை மையப்படுத்தி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது வெளிவரும் விமர்சனங்களுக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரமும் அரசியல் அரங்கில் ஒரு முக்கிய சட்டத்தையே புரட்டிபோட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அவரது கலைக்கப்பட்ட காவி உடையையும் வைத்து நகர்ந்து வரும் தென்னிலங்கை அரசியலில், இனவாதம் மதவாதம் அற்ற அரசாங்கம் என பெயர் சூட்டிய தரப்பு இன்று பதிலின்றி கிடக்கின்றது.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் உரிமையை மையப்படுத்திய பௌத்த மத ஆக்கிரமிப்பு சர்ச்சைகளுக்கு இதுவரையில் பதில் கிடைக்காத நிலையில், சர்ச்சைகளால் மாத்திரம் பிரபலமடைந்த ஒரு தேரருக்கு சட்டமே மாறியுள்ளது என்பது சட்டத்தையும், நீதியையும் தாண்டி இலங்கையில் சக்தி ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்டிப்படைக்கின்றது என்பது வெளிச்சத்துக்கு வருகிறது.
அரசியல் பாதுகாப்பு
மேலும் சில தரப்புக்கள் அரசியல் பாதுகாப்புக்காகவும், இலாபத்துக்காகவும் மத ரீதியான விடயங்களை கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் தேரர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் திடீரெனப் பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்துவதன் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி இருப்பதாக விவாதிக்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தேரர்கள் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த கால ஆட்சியில் இருந்த முக்கிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் கடற்படை முகாம்களில் தங்களுக்கு சாதகமாக இராணுவத்தினரை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினர் மற்றும் தண்டனை வழங்கினர் என்பது குறித்த பழைய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் இன்று தேரர்களை வைத்து தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக நீதிமன்ற தகவல்களில் ராஜபக்சர்களை மையப்படுத்தி எழுப்பப்படும் விவகாரமும் இதனுடன் தொடர்புபட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
மேலும் சஜித்தை தலைமையக கொண்ட தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்தனர்.
போலி பிரசாரங்கள்
ஆனால் அங்கும் சென்று அரசியல் இலாபம் தேட முயற்சித்த போக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவர்கள் இறுதியில் அரசியலுக்காக போலி பிரசாரங்களை ஒருபோதும் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.
தற்போது தேரர்கள் மற்றும் சில குழுவினர் இணைந்து கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடத்தும் நடைபயணம், அதற்குப் பின்னணியில் இருக்கும் மக்கள் ஆதரவு மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் என்பன முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.
மேலும் தேரர்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து முகநூலில் மக்கள் பதிவிடும் கருத்துகள் தீவிரமாக அலசப்படுகின்றன.
அமைதியான பௌத்த கொள்கைகளைப் பேசுபவர்கள் கூட, சமூக ஊடகங்களில் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மஹரகம பகுதியைச் சேர்ந்த ஒரு பௌத்த தேரர் ஆற்றிய தர்ம போதனையில் ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரைகளில் மணியடிப்பது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என அவர் தனது பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
புத்தரின் காலத்தில் மக்கள் தர்மத்தை எவ்வளவு கட்டுக்கோப்புடன் கேட்டனர் என்பதை விளக்கி, தற்கால அரசியல் துறவிகள் பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்துவதக்கவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |