உயிர்த்த ஞாயிறு தாக்குதல் :விசாரணைகளில் வெளியான பல தகவல்கள் : சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்(easter attack) விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அசாத் மௌலானாவை அழைத்துவர நடவடிக்கை
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.
எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்
விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
