உயிர்த்தஞாயிறு தாக்குதல்: மத தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள்..!
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையாயின் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்துவதற்கு கிறிஸ்தவ மத தலைவர்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிறிஸ்தவ மததலைவர்கள் ஒன்றிணைந்து
சனல் 4 இல் வெளியான தகவல்களை பூரணமாக விசாரணை செய்து அது உண்மையாயின் அதற்கு உடந்தையானவர்களை தண்டிக்கும் வகையில் கிறிஸ்தவ மததலைவர்கள் ஒன்றிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
ஏனெனில் கிறிஸ்தவ மத தலைவர்களின் கருத்திற்கு ஒரு மதிப்பும் மரியாதையும் பெறுமதியும் உள்ளது.
எனவே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
அதேபோன்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இதற்கு உரியமுறையில் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்