இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட அப்பாவி பெண்கள்: தலைமறைவான முக்கிய புள்ளிகள்
நீதிக்கான போர் என்ற சாயலில் பல தமிழ் பெண்கள் கொடூரமாக இராணுவத்தினரால் வேட்டையாடப்பட்டு, சீரழிக்கப்பட்டு அந்த கொடூரத்தை மறைக்க மண்ணுக்குள் கொன்று புதைக்கப்பட்டனர்.
இந்த கொடுமைகள் ஒரு இன அழிப்பின் கருப்பொருளாக விளங்கினாலும் அவர்களுக்கு உரிய நீதி இன்றுவரை வழங்கப்படாமலே மறுக்கப்பட்டு மற்றும் மறைக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி வழக்கு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பெண்களின் கண்ணீர் சாட்சியங்களின் பெரும் தொகுப்பாகும்.
1996 முதல் 1998 வரை இடம்பெற்ற இந்த கொடூரங்களில் இராணுவத்தின் வெட்கி தலை குனியும் செயலும் அரசியல் அமைப்பின் கூட்டு மறைப்பும் இணைந்து இன்னும் நீதி கிடைக்காத தன்மையுடன் தொடர்கின்றது.
குறித்த கொடுமைகளை நிகழ்த்தியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அரசே, காலம் காலமாய் அதே இராணுவத்தினரைக் காப்பாற்றும் கடமையை ஏற்று வருகின்றது.
கண்காணிப்பு சாவடியில் நிறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்று புதைக்கும் அந்த இராணுவத்திற்கு எதிராக சாட்சிகள் பேசினாலும், சட்டம் முடங்கி மௌனமாய் தொடர்கின்றது.
அதிகாரிகள் கைது செய்யப்பட்டாலும் சிலர் தண்டனைக் கோபுரங்களின் பின்னால் ஒளிந்திருக்க சிலர் அரசியல் களத்திலும் பாதுகாப்புப் பிரிவுகளிலும் இன்னும் உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர்.
இராணுவம் செய்த கொடூரங்களைப் பற்றி பல ஆயிரக்கணக்கான உறவுகள் இன்னும் சாட்சிகளை தங்களது கண்ணீரோடு சுமந்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும், அதிகார அமைப்பு இன்று வரை அவற்றை வெளிக்கொணர மறுப்பதுடன் மனித உரிமை அமைப்புகள் எத்தனை தடவை சத்தம் எழுப்பினாலும், நீதிக்கான அந்த கதவு திறக்க மறுக்கப்படுகின்றது.
இவ்வாறு செம்மணியில் சீரழிக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட கிருஷாந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள இராணுவத்தினரின் மறைமுக செயல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
