ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Maithripala Sirisena Easter Attack Sri Lanka Law and Order
By Dilakshan Feb 04, 2026 02:51 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு நேற்று(03), ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாமினால் மேற்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

சிறீதரன் உள்ளிட்டோரின் உதவி வேண்டும்! எதிர்பார்ப்பை அறிவித்த அரசாங்கம்

சிறீதரன் உள்ளிட்டோரின் உதவி வேண்டும்! எதிர்பார்ப்பை அறிவித்த அரசாங்கம்


மனுவின் பிரதிவாதிகள்

எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Easter Attacks Court Verdict On Maithri S Petition

இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Easter Attacks Court Verdict On Maithri S Petition

அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026