ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம்!
2019 Sri Lanka Easter bombings
Sri Lanka
Easter Attack Sri Lanka
By pavan
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்றைய தினமும் நாளைய தினமும் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிறு தற்கொலை
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட உள்ளனர்.

இந்த விவாதத்தை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்றத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்