ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சர்வதேச விசாரணை அவசியமில்லை என்கிறார் மல்கம் ரஞ்சித்
Sri Lanka
Easter Attack Sri Lanka
Channel 4 Easter Attack
By pavan
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால், அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய புனித மிக்கேல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேசம் அவசியமில்லை

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டு, அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இவை அனைத்தும் வெளிப்படையான முறைகளில் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி