ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான திட்டங்கள் அனைத்தும் பிள்ளையான் சிறையில் இருக்கும் போதே தீட்டப்பட்டதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையான் சிறையில் இருக்கும் போது தான் இந்த திட்டம் தீட்டப்பட்டதாகவும் சிறையில் வைத்து தான் இந்த குண்டுதாரிகளை தெரிவு செய்ததாகவும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிள்ளையானும் சிறிலங்காவின் புலனாய்வு துறை அதிகாரி சுரேஷ் ஷாலேயும் தான் இந்த திட்டத்திற்கு மாஸ்டர் மைண்டாக (master mind) செயற்பட்டாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த குண்டு வெடிப்புக்கான திட்டங்கள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு திட்டமிட்டதாகவும் அது ஒரு தனிப்பட்ட இடத்தில் அமைந்துள்ள பாம் ஹவுஸில் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.