உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரி மீது பாயுமா சட்டம்?
srilanka
easter
maithripalasirisena
By Vasanth
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை முன்னிறுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடர எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சட்டமேதை பிரதீபா மஹானாம மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் சார்பில் சட்டத்தரணிகள் அவரது பதவி சிறப்புரிமை பற்றி சுட்டிக்காட்டி வழக்கை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுக்கலாம்.
ஆனாலும், வோட்டார்ஸ் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு நட்ட ஈடும் செலுத்த நேரிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.