உயிர்த்தஞாயிறு தாக்குதலை நினைவு கூர்ந்த நாடாளுமன்றம்
srilanka
remembering
parliament
eastersundayattack
By Sumithiran
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பின் பின்னர் ஒருநிமிட அஞ்சலியை சபையிலிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று செலுத்தினர்.
இதேவேளை எதிர்க்கட்சியில் பல்வேறு உறுப்பினர்களும் இன்றைய தினம் கறுப்பு ஆடை அணிந்தவாறு சபைக்கு சமூகமளித்திருந்தனர். அதேபோல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் கறுப்பு பட்டியை அணிந்தபடி வருகை தந்தனர்.
இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையிலும் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.







10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்