வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை

Election Commission of Sri Lanka Provincial Council
By Independent Writer Sep 23, 2026 02:20 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை முதலில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையின் கீழ், முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போதுள்ள அரசியல் சூழல் அரசாங்கத்திற்குச் சாதகமாக இருப்பதுடன், தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா வழங்கி வரும் அழுத்தங்களுக்கு இராஜதந்திர தீர்வாகவும் இது அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

இந்தியா கொடுத்து வரும் அழுத்தம்

பழைய தேர்தல் முறையின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை | Eastern Northern Provincial Council Election First

இலங்கையின் 9 மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அவை அனைத்தும் தற்போது ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றன.

மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையைப் பின்பற்றி, முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களையும், அதன்பின்னர் ஏனைய மாகாண சபைக்கான தேர்தல்களையும் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான முன்மொழிவொன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை அரசாங்கத்திற்கு ஓரளவு சாதகமாக அமைந்திருப்பதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதற்குப் பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா கொடுத்து வரும் அழுத்தங்களுக்குப் பொருத்தமான இராஜதந்திர தீர்வாகவும் இந்த நடவடிக்கை அமையும் எனப் பல தரப்பினரும் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

பழைய தேர்தல் முறை

அரசாங்கம் இவ்வாறானதொரு ஆயத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது என்ற தகவலைக் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர், இலங்கையின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடம் மிக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை | Eastern Northern Provincial Council Election First

குறித்த முன்மொழிவின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களைப் பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேலும், வடக்கின் முக்கிய அரசியல்வாதிகளை அரசாங்கத்தின் பக்கம் ஈர்ப்பதுடன், அப்பகுதிகளில் விரைவான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துத் தேர்தலுக்கு அடித்தளமிடுவது மிகவும் பொருத்தமானது என சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்திற்கு மேலும் யோசனை தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் அனைத்து மாகாண சபைகளும் தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த தகவல்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026