கிழக்கில் நாளை துக்க தினம்!
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த 1ஆம் திகதியன்று இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும்.
அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாளை திங்கட்கிழமை (05) தமிழ்தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துகின்றோம் என வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் கூட்டாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளன.
இதற்கு தமிழ் தேசிய கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன் திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் உங்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.