சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான புதிய சாதனைகள்!

Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Eastern Province
By Dhilak Jun 21, 2026 09:13 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் 

இதேவேளை, மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான புதிய சாதனைகள்! | Eastern Province Ol Exam Results

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.

கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.

கல்வி முன்னேற்றம்

மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான புதிய சாதனைகள்! | Eastern Province Ol Exam Results

கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்

விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025