கிழக்கு ஆழ்கடலில் திடீர் சுகவீனம்: மூன்று கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் பத்திரமாக மீட்டு
கிழக்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த பலநாள் கடற்றொழில் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாயளர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி, ஏழு கடற்றொழைிலாளர்களுடன் திருகோணமலையிலிருந்து கடலுக்குச் சென்ற ‘சேஷான் புத்தா 02’ என்ற பலநாள் படகு, திருகோணமலைக்கு சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தது.
நீரியல் வளத் திணைக்களம்
இதன்போது, படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் கரைக்கு அழைத்து வருவதற்கு உதவி வழங்குமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடற்படையினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட P450 என்ற அதிவேகத் தாக்குதல் படகை மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தப் படகு மூலம் சுகவீனமடைந்த மூன்று கடற்றொழிலாளர்களும் விரைவாக திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |