பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை..! இன்று முதல் சத்தியாக்கிரக போராட்டம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் (Eastern University Sri Lanka) மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் (03.03.2025) திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் - தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீட மாணவர்கள் ஒன்றியத்தினால் இந்த ஊடக சந்திப்பானது முன்னெடுக்கப்பட்டது.
நிர்வாகத்திற்கு எதிராக குரல்கொடுத்த மாணவர்கள்
இதன்போது குறித்த வளாகத்தில் காணப்படும் விடுதி தொடர்பான குறைபாடுகள், உணவருந்துவதற்கன தொகுதி, மலசலகூடம் தொடர்பான குறைபாடுகள் தொடர்ச்சியாக காணப்பட்டுவந்தது.
இது தொடர்பில் நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு இரு வாரங்களுக்கான கல்வித் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் பாராமுகமாக இருப்பதன் காரணமாக இன்று மாலை முதல் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
