தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை: ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும், கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு (EC) எச்சரித்துள்ளது.
குறிப்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாளும் அவருக்கான தண்டனையில் மாற்றமில்லையென என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீன வரம்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இந்த வரம்புகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் தங்கள் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணையகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
தேர்தல் பணி
குறிப்பாக, தேர்தல் பணியின் போது குறிப்பிட்ட வேட்பாளர் செலவு செய்வது குறித்து யாருக்கேனும் கவலை இருந்தால், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின்படி பதவி நீக்கம், குடியுரிமை இழப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட தண்டனைகள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |