இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான காரணம் வெளியானது
பசில் ராஜபக்ச மற்றும் பி.பி.ஜயசுந்தர பதவியில் இருந்து நீக்கப்பட்டமையே இன்று இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமுக வலைத்தள பதிவில் ஒரு குறிப்பை வெளியிட்டு இவ்வாறு கூறியுள்ளார். 2015 இல் மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமையே இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் ஆணிவேர் என்றே கூற வேண்டும்.
பின்னர் நல்லாட்சி நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது. பின்னர் கோட்டாபய வந்தார். அதனுடன் கொரோனா வந்தது. நாடு அந்நிய செலாவணியை இழந்தது. 2015 தோல்வி இந்த பின்னடைவுகள் அனைத்திற்கும் மையமானது.
இந்த அரசாங்கம் இரண்டு பெரிய தவறுகளை செய்துள்ளது.முதலாவது பி.பி.ஜயசுந்தர நீக்கம்.இரண்டாவது பசில் ராஜபக்சவின் நீக்கம்.
இலங்கையின் பொருளாதாரத்தை 22 பில்லியன் டொலரில் இருந்து 80 பில்லியன் டொலர்களாகக் கொண்டு வந்த இந்த இருவரை விடவும் இலங்கையின் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டவர்கள் எவரும் இருக்க முடியாது. அவர்களை ஓரம் கட்டியது நெருக்கடிக்கு மத்தியில் எங்களை தனிமைப்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
