எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அதிபர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்
Sri Lanka
India
By Beulah
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
அதிபர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் கடந்த 19ஆம் திகதி மெய்நிகர் சந்திப்பொன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையானது, முந்தைய 11 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்