அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு கல்வி அமைச்சர் சுற்றுப்பயணம்! ஒப்பந்தமொன்றும் கைச்சாத்து
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் தனது விஜயத்தின் போது, பல்கலைக்கழகத்தின் சுகாதார மற்றும் அறிவியல் துறைக்கு சொந்தமான உலகின் இரண்டாவது பெரிய மருத்துவப் பள்ளியின் மருத்துவ மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆய்வகங்களை பார்வையிட்டார்.
அதுமாத்திரமன்றி, பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பழமையான பாடசாலை மருந்தகம் மற்றும் நவீன பரிசோதனை கூடங்கள் தொடர்பிலும் அமைச்சர் பிரேமஜயந்த கவனம் செலுத்தினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பல்கலைக்கழகம் பயன்படுத்தும் நவீன தொழிநுட்ப முறைகளை இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கூட்டுப் பரிமாற்றத் திட்டத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சர் அறிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு புதிய கற்றல் முறைகளை கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |