பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு( Ministry of Education) அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பில், “வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை.
பட்டப்படிப்பு
எனவே, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும்.
அத்தகைய உள்ளூர் நிறுவனத்திற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே செல்லுபடியாகும் ஒப்பந்தம் உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும்.
அத்துடன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் கொமன்வெல்த் பல்கலைக்கழக ஆண்டு புத்தகத்தில் அல்லது உலக உயர் கல்வி தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதா? என்பதையும் கண்டறிய வேண்டும்.
உள்ளூர் நிறுவனம்
உள்ளூர் நிறுவனத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா? என்பதையும், உள்ளூர் நிறுவனம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பதிவுக்கான வசதிகளை வழங்குகிறதா? என்பதையும் உறுதி செய்து தெரிந்து கொள்ளுங்கள்” என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் www.mohe.gov.lk இல் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்