முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால அட்டவணைகளை செயல்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகம்
இதனடிப்படையில் அமைச்சகத்தின் கூற்றுப்படி, நவம்பர் நான்காம் திகதி 2025 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 34/2025 ஐத் தொடர்ந்து முஸ்லிம் பாடசாலைகள் பணிப்பாளரால் நவம்பர் 13 அன்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

இந்த உத்தரவு அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, முஸ்லிம் பாடசாலைகள் திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை
அத்தோடு, செவ்வாய் முதல் வியாழன் வரை பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.50 மணி வரை இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாடசாலை நாட்களுக்கான விரிவான கால அட்டவணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |