புலம்பெயர் நாடுகளை நோக்கிய நகர்வு...! வட கிழக்கிற்கு காத்திருக்கும் ஆபத்து
2012 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை சனத்தொகை வளர்ச்சி விகித வீழ்ச்சிக்கு தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றமை அமைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் தெரிவித்தார்.
இது இலங்கை தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், அரசியல் ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் சனத்தொகை அதிரித்துள்ளதான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரிந்தாலும், 2012 -2024 ஆண்டுகளில் வளர்ச்சியானது 412, 000 ஆகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வட கிழக்கில் தமிழ் மக்களின் பரம்பல் எப்படி உள்ளது, இது எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |