தரம் 9 வரை விரிவுபடுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தம் : வெளியான தகவல்
அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதுடன், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 1 மணி நேரம் முன்