தனியார் கல்வி நிலையங்கள் மீண்டும் ஆரம்பமாகுமா? தயாராகிறது திட்டம்
Education
educationclass 2017-5
By Vasanth
தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் சுகாதார வழிமுறைகள் அடங்கிய திட்டமொன்று தயாரிக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சுகாதார வழிகாட்டலின் கீழ் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி