யார் கோமாளிகள்? ஈழத்துக் கலைஞர்களின் அரிய படைப்பு
ஈழத்தின் இளம் இசையமைப்பாளரான பூவன் மதீசனின் பபூன் ( கோமாளி ) பாடல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்யப்பட்டது.
இது தொழிலாளர் படும் கஷ்டங்களை வித்தியாசமான காட்சியமைப்புடன் தமிழ் இசையில் பெரிதும் பயன்படுத்தாத ரெகே (reggae ) வகை இசையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.
இந்தப் பாடலுக்கான வரிகளை சாந்தகுமார் எழுத, இடையில் வரும் ராப் வரிகளை எழுதிப் பாடியுள்ளார் ரகு பிரணவன். பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் பூவன் மதீசன். ஈழத்தில் இதுவரை காலமும் வராத புதுவித குறியீட்டு உத்தியை காணொளியில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜ் சிவராஜ். அனைவரையும் கோமாளியாக கவர்ந்த கஜன் தாஸ் என்னும் பல்கலை மாணவனின் அழகிய நடிப்புகளையும் அசைவுகளையும் ஒளித்தொகுப்பின் மூலம் செத்துக்கி உள்ளார் அருண்.
இத்தகு சிறப்பு மிக்க பாடல் இதோ,