லெபனானின் 770 சதுர மைல்கள் நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானின் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் (770 சதுர மைல்கள்) நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என லெபனான் இராணுவத் தளபதி ஜெனரல் ரொடால்ப் ஹைகல் வலியுறுத்தியுள்ளார்.
"எங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் உரிமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்ற தனது ஆணித்தனமான கருத்தையும் முன்வைத்துள்ளார்.
மேலும் எங்கள் பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பதை நாங்கள் நிராகரிக்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கை
தமது தியாகிகள் மற்றும் காயமடைந்தவர்களின் தியாகங்கள் வீணாகாது என்றும் அனைத்து சவால்களையும் மீறி, நாங்கள் தொடர்ந்து நமது மக்களுக்குத் துணை நிற்போம், அவர்கள் திரும்புவதற்கு ஆதரவளிப்போம், எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல் பணிகள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் சமூக மக்களின் கூட்டு நினைவுகள் ஆகியவற்றில் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையான கவலையை உண்டாக்குகின்றன என்று லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (UNSCOL) எச்சரித்துள்ளது.
இதன்படி நிலுவையில் உள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இராஜதந்திர வழிமுறைகள் தொடர்ந்து செயல்படுவதால், அழிவின் வேகத்தில் ஏற்படும் இந்த அதிகரிப்புக்கு ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கடற்படைப் பேரவை கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |