சுவிஸில் திரையிடப்படவுள்ள பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி
ஐபிசி தமிழ் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் இயக்கத்திலும் உருவான “பொம்மை“ முழுநீள திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சுவிட்சர்லாந்தில் திரையிடப்படவுள்ளது.
எதிர்வரும் 31.05.2026 அன்று இரவு 08.15 அளவில் KINO GOTTHARD, GOTTHARDSTRASSE 18, 6300 UG என்ற இடத்தில் பொம்மை திரைப்பட சிறப்புக்கட்சி திரையிடப்படவுள்ளது.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் 2025 செப்டம்பர் 19ஆம் திகதி முதல் வெளியாகியிருந்தது.
சிறப்புக் காட்சி
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் திரையிடப்படவுள்ள சிறப்புக் காட்சியை பார்வையிட முன்பதிவு செய்வதற்கு 076 338 3870, 076 755 5952, 077 925 7748 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.

பொம்மை திரைப்படம் சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும், போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும், தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளதுடன் சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |