ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக வழிநடத்தப்பட்டதாலேயே அந்த கப்பல்கள் அப்பகுதி வழியாக செல்ல முயன்றதாக ஈரான் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கை
இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கையால், ஹோர்முஸ் நீரிணைக்கு தெற்கே உள்ள கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணை கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்தன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மிகவும் பாதுகாப்பற்றதாகவும் முழுமையாக மூடப்பட்டதாகவும் இருக்கும். தங்கள் சொத்துகளையும், மிக முக்கியமாகத் தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள கண்ணி வெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்தது.
எச்சரிக்கையை புறக்கணித்த கப்பல்கள்
அதேபோல் கண்ணிவெடிகள் உள்ள பாதையில் நுழைவதற்கு முன்பு ஈரான் கடற்படையின் எச்சரிக்கைகளை 2 கப்பல்களும் புறக்கணித்ததாகவும், அதனால் வெடிப்புகளும், பெரிய தீ விபத்துகளும் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்தது.

கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.
இதேவேளை கண்ணிவெடியில் கப் பல்கள் சிக்கியதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறும்போது, ஈரானின் குற்றச்சாட்டு பொய்யானது. இது சரிபார்க்கப்படாத ஈரான் ராணுவத்தின் வழக்கமான தகவல்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 14 மணி நேரம் முன்