முட்டை விலை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Egg
By Shadhu Shanker
முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் மூலம் ரூபா 20 இலாபம் சம்பாதித்து வருவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பண்ணைகளில் இருந்து 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலான விலைக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு முட்டை விற்கப்படுகின்றது.
முட்டை ஒன்றின் விலை
இதற்கமைய, சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் அனுர மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போது இலங்கையில் நாளாந்த முட்டை தேவை 8.5 மில்லியன் முட்டைகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்