குறைக்கப்பட்ட முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு
                                    
                    Mahinda Amaraweera
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Economy of Sri Lanka
                
                                                
                    Egg
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    நாட்டில் மீண்டும் முட்டையொன்றின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ஒரு முட்டையை மொத்த விலையில் 60ரூபாவிற்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மகிந்த அமரவீர தெரிவிப்பு
அத்துடன் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டையின் விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை சேமித்து வைத்திருந்த இடைத்தரகர்கள் குழுவொன்று இவ்வாறு முட்டை விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        