முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்!
சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை (Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
பண்ணை உரிமையாளர்கள்
மேலும் ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவால் உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதேவேளை, இலங்கையின் சந்தையில் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி அரிசி விலையை அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) குற்றம் சாட்டியுள்ளார்.
பண்டிகை காலத்தை குறிவைத்து, அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறு நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
