வெளிநாடொன்றில் கைதான எட்டு இலங்கையர்- வெளியான அறிவிப்பு
Sri Lanka
Nigeria
By Sumithiran
வெளிநாடொன்றில் கைதான 8 இலங்கையர்கள் உட்பட 27 பேர் விடுதலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரிய அரசாங்கமே இவர்களை விடுதலை செய்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த நோர்வே நாட்டுக்குச் சொந்தமான 'MT Heroic Idun' கப்பலில் பணியாற்றிய இவர்களையே நைஜீரிய நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்துள்ளது.
இலங்கையர் உட்பட 27 பேர் கைது
இந்த கப்பலில் 3 மலையாளிகள் உட்பட 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், மற்றும் போலந்து, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் கடற்படையினரால் கச்சா எண்ணெய் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி