யாழில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து : பரிதாபகரமாக பறிபோன முதியவரின் உயிர்
காரைநகரில் நேற்றிரவு (03) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் மீது மோதியது.
சம்பவ இடத்தில் உயிரிழப்பு
முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலமானது காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |