கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Thulsi Sep 22, 2026 05:45 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த குறித்த பெண், தனது மகனுடன் அராலி மத்தி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

சடலத்தில் அடிகாயங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண் வீட்டில் சடலமாகக் காணப்படுவதாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது | Elderly Tamil Woman Found Dead In Home In Jaffna

இதன்போது, சடலத்தில் பல்வேறு அடிகாயங்கள் காணப்பட்டதுடன், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் பல இடங்களில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின்போது பெண்ணின் உடலில் கைகளாலும், வயர்களாலும், பொல்லுகளாலும் தாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

ஆரம்பகட்ட விசாரணை

குறித்த வீட்டில் உயிரிழந்த பெண்ணும் அவரது மகனும் மட்டுமே வசித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது | Elderly Tamil Woman Found Dead In Home In Jaffna

இதனையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகனை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வீதியில் பல இலட்சம் ரூபாய் பணத்தை வீசியதுடன், மேலும் பல இலட்சம் ரூபாய் பணத்தை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026