யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
யாழ்ப்பாணம் (Jaffna)- அளவெட்டிப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலச்சந்திரன் உமாதேவி என்ற 74 வயதான மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த மூதாட்டி வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயல் வீட்டார்கள் கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சடலம் மீட்பு
இதையடுத்து, காவல்துறையினரின் உதவியுடன் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலம் மீட்கப்பட்டது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி