இளம் தாயை வன்கொடுமைக்கு உட்படுத்திய வைத்தியர்: நேர்ந்த கதி
இளம் தாயொருவரை (25 வயது) தவறான முறையில் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிப வைத்தியர் (70 வயது) ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை நேற்றைய தினம் (11) அநுராதபுர (Anuradhapura) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள தனியார் சிகிச்சை நிலையமொன்றில் கருப்பைப் பையினுள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமொன்றை அகற்றுவதற்காக குறித்த வைத்தியரிடம் பெண் சென்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இதன்போது குறித்த வைத்தியர் தவறாக நடந்து கொண்டு வன்கொடுமை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளனின் மூலம் வைத்தியர் வன்கொடுமை செய்த விவகாரம் நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
இதையடுத்து, நேற்றைய தினம் (11) வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் திசாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான வைத்தியர் ஒருவருக்கே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
