சபாநாயகருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு (Jagath Wickramaratne) எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறைப்பாடு புதிய மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோனினால் நேற்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் நாடாளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்
நிறுவன சட்டக் கோவையின்படி சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை வேறு எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுத்த முடியாது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அமைச்சரவை ஒப்புதல் தேவை.
தற்போது அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் அதற்காக நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது” என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
