இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்ட்டுள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதி காலம் நிலவும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சார கூட்டம்
அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வாக்களிக்க சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
