எல்லை நிர்ணய அறிக்கை பிரதமர் கைகளில்
எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் புதிய எல்லை நிர்ணய அறிக்கை இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் கூடுகிறது.
எதிர்கால நடவடிக்கை
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (11) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசித்து, ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் குறித்து முதல் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடி மீண்டும் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்
