சற்றுமுன் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
                                    
                    Election Commission of Sri Lanka
                
                                                
                    Election
                
                                                
                    Current Political Scenario
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் (26) வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனம் நாளை வெளியிடப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கை
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடியிருந்தது.
    
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்