செப்டெம்பர் மாதம் 20இல் தேர்தல்! அதிகாரம் கிடைத்துள்ளதாக தே.ஆ தலைவர் தகவல்
People
Election
Vote
SriLanka
Local Council
Nimal G Punchihewa
By Chanakyan
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா (Nimal G Punchihewa) தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும். உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்