தற்போது அதிகாரத்தில் இருக்கும் அனைத்து ராஜபக்சவினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும்!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமன்றி தற்போது அதிகாரத்திலுள்ள அனைத்து ராஜபக்சவினரும் போட்டியிடுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிகாரம் இன்னும் 05 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சிறிபால கம்லத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அரச தலைவர் கோட்டாபய போட்டியிடுவார். எனினும் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை பற்றி ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும். ஸ்ரீலங்கா அரச தலைவரால் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் தொடங்கப்படட வேலைத்திட்டங்களுக்கமைய, நாடு என்ற படி விசேடமாக தேசிய பாதுகாப்பு, பொருளாதாரத்தைப் பலப்படுத்திய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே அதிகாரத்தில் இருக்கும்.
குறைந்தது இந்த அபிவிருத்திப் பணிகளை சம்பூரணப்படுத்த 05 வருடங்காளவது தேவைப்படுகின்றது. பிரதமர் பதவி குறித்த விடயத்தில் தகுதியுடையவர் நியமிக்கப்படுவார். தற்போதுள்ள அனைவரும் அடுத்த முறையிலும் பதவிக்கு வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ, நிதியமைச்சராகவோ வந்தாலும் அவரது திறமை மீது மக்களுக்கு நம்பிக்கையுள்ளது. அதேபோல நாமல் ராஜபக்ஷவும் இளைஞர்கள் இடையே நம்பிக்கைப் பெற்றவர் .எமக்கு இன்னும் 05 வருடங்கள் இருப்பதால் யார் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் என்ற கேள்விக்கான பதிலை இப்போதிருந்தே ஏற்பாடு செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.