மக்கள் ஆதரவை இழக்கும் மோடி: பதவி விலகுமாறு வலுக்கும் எதிர்ப்பு
மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி( Narendra Modi) பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத நிலையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மை பெற 273 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாஜக 400 இடங்களை வெல்லும் என்று மோடி பிரசாரம் செய்திருந்த நிலையில் 300 இடங்களை கூட பாஜகவால் வெல்லமுடியவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மோடியை விலகுமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |