இந்த ஆண்டு எந்தவொரு தேர்தலும் நடைபெறாது - சமன் ரத்னப்பிரிய
இலங்கையில் இந்த ஆண்டு எந்தவொரு தேர்தலும் நடைபெறாதென சிறிலங்கா அதிபரின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, சமன் ரத்னப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால நிர்ணயமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெறுமென பலர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிபர் தேர்தல் இந்த வருட இறுதிக்கு முன்னதாக நடைபெறாதென சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான ஆண்டு

அத்துடன், 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு எனவும் அதன் ஆரம்பமாக, அடுத்த வருடத்தில் அதிபர் தேர்தல் இலங்கையில் நடைபெறுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் மக்கள் ஆணையுடன் அடுத்த ஆண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட வேண்டுமென சமன் ரத்னப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டில் சிறிலங்கா அதிபராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியேற்றிருக்க வேண்டுமான போதிலும், அவருக்கு அதற்கான தகுதியில்லாத காரணத்தால் அவர் பதவி ஏற்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை சஜித் பிரேமதாச அறிந்திருக்கவில்லை எனவும் அவருக்கு அது தொடர்பான பொருளாதார அறிவு இருக்கவில்லை எனவும் சமன் ரத்னப்பிரிய மேலும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்