ஒரு போதும் ஒத்திவைக்க முடியாது -தெளிவாக கூறியுள்ள உச்சநீதிமன்றம்
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்ததுடன் குறிப்பிடப்பட்ட திகதிகளுக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தெளிவாக கூறியுள்ள உச்சநீதிமன்றம்

"மார்ச் 30க்கு முன், நாடு முழுவதும் உள்ள, 340 உள்ளாட்சி அமைப்புகளும் நிறுவப்பட்டு, இறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்ய, பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில், தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை ஒத்தி வைப்பதென்றால் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முற்றிலும் சாத்தியமில்லை. இந்தத் திகதிகளின்படி இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார்.