ஜூலை 01 ஆம் திகதி முதல் குறைகிறது மின் கட்டணம் - எடுக்கப்படவுள்ள இறுதித்தீர்மானம்
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட விபரம்
இந்நிலையில் மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.
இதற்கமைய வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுகள் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை 29 முதல் 40 வீதமாகவும் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின் கட்டணமானது 66% அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.