கல்முனையில் மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (9) இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு , வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள், என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மின்சார தொழிலாளர் கோரிக்கை
இந்த நிலையில், மின்சார தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லையாயின் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என ஆர்ப்பாட்க்காரர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, சுமார் 50க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



