நாளையதினம் வெளிவரவுள்ள முக்கிய முடிவு - இருளில் மூழ்குமா இலங்கை?
strike
servant
Ceylon Electricity Board
By Sumithiran
கெரவலபிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நாளையதினம் முக்கிய முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறித்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மேற்கொள்ளவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கான திகதி நாளை (04) தீர்மானிக்கப்படும் என தெரியவருகிறது.
இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட, கூட்டமைப்பின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால்(Ranjan Jayalal) இதனைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான உடன்படிக்கையை இரத்து செய்யும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.