3 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தம் இல்லை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
புதிய இணைப்பு
அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணங்களில் திருத்தம் இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது PUCSL இன் தலைவர் கே.பி.எல். சந்திரலால் வெளியிட்டுள்ளார்.
இன்று (14) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று காலை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு முறையாக முன்னெடுக்கப்படா விட்டால் எதிர்காலத்தில் மின் கட்டண உயர்வை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபை சுயாதீன தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை மின்சார சபையானது ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பை முன்மொழிந்திருந்தது.
மின்சார கட்டண திருத்தம்
இந்த முன்மொழிவு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் செயல்முறை நடைபெற்றது.
இந்த ஆண்டின் மூன்றாவது மின் கட்டண மாற்றத்தைச் சார்ந்த கருத்து சேகரிப்பு அமர்வுகளில் சுமார் 500 பேர் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
